தமிழ் படம் என்கிற தனது முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் அதைத்தொடர்ந்து தமிழ் படம்-2 இயக்கிய அமுதன், தற்போது விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ரத்தம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இன்னும் வெளிநாட்டில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில் படத்தின் மற்ற காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு முடிவடைந்ததாக படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி என்ன கெட்டப்பில் நடிக்கிறார் என்பது குறித்த அவரது கேரக்டர் லுக்கை இப்போது வெளியிட விருப்பம் இல்லை என்றும் இன்னும் அதற்கான காலம் இருக்கிறது என்றும் இயக்குனர் சி.எஸ் அமுதன் கூறியுள்ளார்