சந்தானம் நடித்த தில்லுக்குதுட்டு, மற்றும் அதன் இரண்டாம் பாகம் ஆகியவற்றை இயக்கியவர் இயக்குனர் ராம்பாலா. தற்போது அடுத்ததாக மிர்ச்சி சிவா நடிப்பில் இடியட் என்கிற படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்

மற்றும் முக்கிய வேடங்களில் ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் நடித்துள்ள சிவாவுக்கும் நிக்கி கல்ராணிக்கும் மட்டுமே சொந்தமான அதேசமயம் இதுவரை யாரும் செய்திராத ஒரு சாதனை ஒன்றும் உள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் அதிக அளவில் இரண்டாம் பாக படங்களில் நடித்தவர் சிவா மட்டும் தான். சென்னை 28 பார்ட் 2, தமிழ் படம் 2, கலகலப்பு 2 என மூன்று படங்களில் இரண்டாம் பாகங்களில் நடித்துள்ளார்.

அதேபோல நடிகை நிக்கி கல்ராணி கலகலப்பு-2 சார்லி சாப்ளின்-2, கோ-2 என மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களில் நடித்துள்ளார்.

இதில் சிவா நடித்துள்ள இரண்டாம் பாகங்கள் அனைத்தும் அவர் முதல் பாகத்தில் நடித்தவையே. ஆனால் நிக்கி கல்ராணி நடித்த இந்த மூன்று படங்களின் முதல் பாகங்களிலும் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.