நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் பீஸ்ட் வரும் ஏப்ரல் 13ம் தேதி படம் வெளியாக உள்ளது அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழைப் போல தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே இந்த படம் பீஸ்ட் என்கிற பெயரில் வெளியாக, இந்தியில் மட்டும் ரா என்கிற டைட்டில் வெளியாக இருக்கிறது. ரா என்பது உளவுத்துறை அமைப்பை குறிக்கும் வார்த்தை.
படத்தில் ஏற்கனவே விஜய் துப்பாக்கி வைத்துக் கொண்ட பல புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் இந்த படத்தில் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரியாக அவர் நடிக்கிறார் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன அதற்கேற்றாற்போல் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.