சூர்யா அறிமுகமான காலகட்டத்தில் ஒரு வழக்கமான ஹீரோ என்கிற வட்டத்துக்குள்ளேயே நடித்து வந்தார்.. தான் இயக்கிய நந்தா மற்றும் பிதாமகன் படம் மூலம் சூர்யாவுக்குள் இருந்த நடிப்புத் திறமையை வெளியே கொண்டுவந்து அவரை முன்னணி நடிகர்கள் வரிசைக்கு உயர்த்தியதில் இயக்குனர் பாலாவின் பங்கு மிக முக்கியமானது.
எப்போதுமே இயக்குனர் பாலாவைத்தான் தனது குரு, தனது வழிகாட்டி என சூர்யா கூறுவது வழக்கம். அந்த வகையில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் பாலா டைரக்ஷனில் நடிக்கிறார் சூர்யா.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று துவங்கியுள்ளது.

படத்தின் கதாநாயகியாக தெலுங்கில் சமீபகாலமாக மிகப்பெரிய புகழ் பெற்றுள்ள கிரித்தி ஷெட்டி நடிக்க இன்னொரு முக்கியமான வேடத்தில் மலையாள நடிகை மமீதா பைஜு என்பவர் நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா இதுவரை நடித்திராத முற்றிலும் புதிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது