Home News Kollywood பீஸ்ட்-கேஜிஎப்-2 இரண்டையும் ரசிப்பார்கள் ; யஷ்ஷின் பக்குவ பதில்

பீஸ்ட்-கேஜிஎப்-2 இரண்டையும் ரசிப்பார்கள் ; யஷ்ஷின் பக்குவ பதில்

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் உருவாகி இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பான் இந்தியா படமாக வெளிவந்தது கேஜிஎப் சாப்டர்-1. பிரசாந்த் நீல் இயக்காத்தில் யஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கேஜிஎப் 2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார் முக்கியமான வேடங்களில் சஞ்சய்தத் மற்றும் ரவீணா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்வில் இந்த படத்தை தமிழில் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, மலையாளத்தில் வெளியிடும் நடிகர் பிரித்விராஜ் மற்றும் இந்தியில் வெளியிடும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் யஷ் பேசும்போது, அவரிடம் விஜய் படத்துக்கு போட்டியாக உங்கள் படம் வெளியாகிறதா என கேட்கப்பட்டது. அதை மறுத்த யஷ், இரண்டு படங்களும் போட்டியாக வெளியாகவில்லை. இரண்டு படங்களும் இணைந்து வெளியாகின்றன. இரண்டு படத்தையும் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள். விஜய் கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்தவர்.. நானும் பீஸ்ட் படத்தை பார்ப்பேன்.. இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும்” என்று பக்குவமாக பதில் அளித்தது விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது