எண்பதுகளில் கல்லூரி பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன்.. மைக் மோகன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் அளவிற்கு பெரும்பாலான படங்களில் பாடகர் ஆகவே நடித்து அவரே அந்த பாடல்களைப் பாடியது போன்ற ஒரு தோற்றத்தையும் இன்றளவும் உருவாக்கி வைத்துள்ளார்.
அதன்பிறகு ஒரு கட்டத்தில் நடிப்பிலிருந்து ஒதுங்கிய மோகன் தற்போது ஹரா என்கிற படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். தாதா 87 என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் விஜய்ஸ்ரீ தான் இந்த படத்தை இயக்குகிறார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது
நடிகர் சாருஹாசனையே ஆக்சன் ஹீரோவாக நடிக்க வைத்தவருக்கு மோகனை ஆக்சன் ஹீரோவாக மாற்றுவதில் அவ்வளவு பெரிய சிரமம் இருக்காது.
அதேசமயம் தான் நடித்த ஆரம்ப காலகட்டங்களில் இருந்து மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மோகனுக்கு, அவர் திரையுலகில் மீண்டும் அழுத்தமாக கால் பதிக்க நினைக்கும் இந்த ஹரா படமும் அவரது ஆக்சன் அவதாரமும் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.