இயக்குனர் வெங்கட் பிரபுவின் கூட்டணி நடிகர்களில் ஒருவராகவும் சிம்புவின் ஆதர்ச தம்பியாகவும் அறியப்படுபவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, சமீபத்தில் வெளியான மாநாடு முதற்கொண்டு மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களிலும் தனக்கான முத்திரையை பதித்து வரும் மஹத் ராகவேந்திரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவு ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

இந்த நிலையில் தற்போது முதன்முறையாக அவர் எமோஜி என்கிற வெப்சீரிஸில் நடித்துள்ளார், இதில் தேவிகா சதீஷ் மற்றும் மானசா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஆடுகளம் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை சென்.சா ரங்கசாமி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். சென்னை, தென்காசி, நாகர்கோவில், ஐதராபாத் கேரளாவில் உள்ள வனப்பகுதிகளிலும் இந்த வெப்சீரிஸ் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழில் ஆஹா என்கிற ஓடிடி தளத்தை வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று துவங்க உள்ளார் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த். அதில் தான் இந்த எமோஜி வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது. படக்குழுவினருடன் சந்திப்பு நடத்திய அல்லு அரவிந்த் இந்த வெப்சீரிஸின் சில முன்னோட்ட காட்சிகளை பார்த்ததுமே இதை தனது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிட சம்மதித்து விட்டார்.

இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அவருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்