V4UMEDIA
HomeNewsKollywoodஓடிடியில் வெளியாகும் அக்ஷரா ஹாசன் படம்

ஓடிடியில் வெளியாகும் அக்ஷரா ஹாசன் படம்

கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருவதுடன் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அவரை பின்பற்றி அவரது சகோதரி அக்ஷரா ஹாசனும் நடிப்பில் களமிறங்கினார்.

தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படத்தில் மிக முக்கியமான அதிரடி ஆக்சன் கதாபாத்திரம் ஒன்று நடித்திருந்தவர் அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் தற்போது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் எஸ்.ராமமூர்த்தி இயக்கியுள்ளார் இதில் அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக பிரபல பாலிவுட் பின்னணிப் பாடகி உஷா உதுப் நடித்துள்ளார். இந்த படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வரும் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments