V4UMEDIA
HomeNewsKollywoodஹீரோவான குக்கூ வித் கோமாளி புகழ்

ஹீரோவான குக்கூ வித் கோமாளி புகழ்

தமிழ் சினிமாவை பொருத்தவரை அனைவரையும் ரசித்து சிரிக்க வைக்கும்படியான காமெடி நாயகர்கள் உருவாவது மிக கொஞ்சமே என்கிற நிலையில் அப்படி ஓரளவு நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகர்களாக வளர்ந்து வருபவர்களை உடனே கதாநாயகனாக மாற்றி படம் எடுக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. சந்தானம் ஹீரோவான பிறகு அவருக்குப் பின்பு ஏற்பட்ட வெற்றிடத்தை நடிகர் யோகிபாபு நிரப்புகிறார். அவரையும் கூட கதையின் நாயகனாக வைத்து சில படங்கள் வெளியாகின. ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்றன. அதே சமயம் அவர் மற்ற ஹீரோக்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் திரையுலகில் நுழைந்தவர் விஜய் டிவியில் நடைபெற்று வரும் குக்கூ வித் கோமாளி புகழ். இவரும் தற்போது வலிமை, எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அடுத்து ஒரு நம்பிக்கை நகைச்சுவை நடிகராக உருவெடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரும் தற்போது மிஸ்டர் ஜு கீப்பர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சுரேஷ் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

Most Popular

Recent Comments