V4UMEDIA
HomeNewsKollywoodஅருண் விஜய்யின் யானையை விலைக்கு வாங்கிய நிறுவனம்

அருண் விஜய்யின் யானையை விலைக்கு வாங்கிய நிறுவனம்

கமர்சியல் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அவரது நெருங்கிய உறவினரான நடிகர் அருண்விஜய் முதன்முதலாக இணைந்து நடித்துள்ள படம் யானை இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க முக்கிய வேடங்களில் ராதிகா, யோகிபாபு, அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்

அருண்விஜய்யின் 33 வது படமான இந்த படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த படம் மே மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கேகேஆர் என்கிற நிறுவனம் பெற்றுள்ளது.

Most Popular

Recent Comments