மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் ஆர்.ஜே பாலாஜி. அதை தொடர்ந்து தனது டைரக்ஷனில் அடுத்த படமாக வீட்ல விசேஷம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது பதாய் ஹோ என்கிற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க சத்யராஜ், ஊர்வசி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூன்-17ஆம் தேதி ரிலீசாக உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது..