சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பத்து வருடங்களுக்கு முன்பு தனுஷ், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த 3 என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தற்போது இந்தி. தெலுங்கு. தமிழ் என மும்மொழிகளில் உருவாகியுள்ள முசாபீர் என்கிற வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார்.
தமிழில் இந்த ஆல்பம் பயணி என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பாடலை ஆணிருத் பாடியுள்ளார். இந்த ஆல்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்.
மேலும் அவர் இந்த ஆல்பம் பற்றி கூறுகையில், “ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷன் திரும்பியுள்ள எனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள பயணி என்கிற இசை ஆல்பத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. உனக்கு எப்போதும் நல்லதே அமைய வேண்டும் என விரும்புகிறேன். கடவுளின் ஆசீர்வாதம் இருக்கும்” என்று கூறி வாழ்த்தியுள்ளார்