தனது காதல் கணவர் நாக சைதன்யாவுடனான பிரிவை அறிவித்த பின்பு தீவிரமாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. அந்தவகையில் குணசேகர் இயக்கத்தில் சாகுந்தலம் படத்தை முடித்து விட்ட அவர், தற்போது இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரீஷ் சங்கர் இருவரும் இணைந்து இயக்கும் யசோதா என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக பிரமாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை வியப்படையச் செய்தன, இந்த செட்டில் தான் தற்போது இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நகரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள சமந்தா, தினசரி படப்பிடிப்புக்கு வந்து செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த பிரம்மாண்டமான அரங்கையும், அதில் உள்ள தங்கும் வசதியையும் பார்த்து சமந்தா நான் இந்த செட்டிலேயே தங்கிக் கொள்கிறேன் என்று கூறி ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தங்கி விட்டாராம். படக்குழுவினர் இதை ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.