தனுஷ் நடித்துள்ள படங்களில் பெரியவர்கள் முதல் குட்டீஸ்கள் வரை அனைவரும் எப்போதும் ரசித்துப் பார்க்கும் படம் என்றால் அது ‘யாரடி நீ மோகினி’ படமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு சென்டிமெண்ட். மற்றும் ஜாலி கலாட்டா என சரிவிகிதமாக கலந்து அந்தப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவகர்.
அதைத்தொடர்ந்து தனுஷின் ஆஸ்தான இயக்குனர் ஆகவே மாறிய இவர் தனுஷை வைத்து குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கினார். இந்தநிலையில் சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் மித்ரன் ஜவஹர்.
நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா என மூன்று கதாநாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர், முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா இருவரும் நடித்துள்ளனர்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை துவங்கிவிட்டார் நடிகர் தனுஷ். சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.