கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து வரும் இரண்டே வார்த்தைகள் பிகிலி மற்றும் ஆன்ட்டி பிகிலி. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிச்சைக்காரன்-2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது. இந்தப்படத்தை விஜய் ஆண்டனியே இயக்குகிறார்.
இந்த படத்தில் ஆன்ட்டி பிகிலி என்கிற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. பிகிலிக்கு எதிரான ஆன்ட்டி பிகிலி விஜய் ஆண்டனி தான் என்றால் அப்போது பிகிலி என்பவர் யார் என்கிற கேள்வி கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று பிகிலி தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரராக இருக்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் போன்று மேக்கப் போட்டுக்கொண்டு பிச்சை எடுக்க வீதிக்கு செல்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் இறுதி காட்சியில் முகத்தை மூடியபடி தோன்றுகிறார் பிகிலி.
என்னதான் புருவங்கள் அடர்த்தியாக ஆளே தோற்றம் தெரியாத அளவுக்கு இருந்தாலும் கூட, அது பார்ப்பதற்கு விஜய் ஆண்டனி போலவே இருக்கிறது, அவர்தான் பிகிலி என்று ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை அப்படி இருந்தால் படம் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்பது உறுதி.