சமீபத்தில் வெளியான வீரமே வாகை சூடும் படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் லத்தி சார்ஜ்.. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கிவரும் இந்த படத்தை நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது விஷாலுக்கு உடலில் ஆங்காங்கே சில காயங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து கேரளாவிற்கு சென்று மூலிகை சிகிச்சை எடுத்து, காயங்கள் ஆறியபின் மீண்டும் தற்போது லத்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் விஷால்.
இந்த நிலையில் விஷாலை மட்டுமல்ல படக்குழுவில் சண்டை காட்சிகளில் நடிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் இன்னும் கவனமாக மேற்கொண்டு வருகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். அந்த வகையில் சண்டை கலைஞர் ஒருவருக்கு காலில் பாதுகாப்புக்காக பீட்டர் ஹெய்ன் செருப்பு அணிவித்து வரும் வீடியோ காட்சி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.