நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அப்படியே நட்புக்காக பாடலாசிரியராகவும் மாறினார். சிவகார்த்திகேயனின் காமெடிக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை விட அவரது பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் ஒன்று உருவாக்கி இருக்கிறது..
அந்த வகையில் தற்போது நெல்சன் திலீப்குமார் டைரக்ஷனில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடல் உலகையே கலக்கி வருகிறது. இந்த பாடல் 2௦௦ மில்லியனை விரைவில் தொடப்போகிறது.
இது ஒருபக்கமிருக்க சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் நடித்துள்ள டான் படத்திலும் ஜல புல ஜங் என்கிற பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அந்த பாடல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 50 மில்லியன் பார்வையாளர்கள் என்கிற சாதனையை தொட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பாடல்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.