V4UMEDIA
HomeNewsKollywoodவிக்ரம் ரிலீஸ் தேதி ; லோகேஷ் கனகராஜூக்கு கமல் பிறந்தநாள் பரிசு

விக்ரம் ரிலீஸ் தேதி ; லோகேஷ் கனகராஜூக்கு கமல் பிறந்தநாள் பரிசு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி பஹத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் படம் விக்ரம். 35 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த படத்தின் டைட்டிலையே மீண்டும் வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளார் கமல்ஹாசன். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன,

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 14-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. அது என்ன மார்ச் 14 கணக்கு, எதுவும் விசேஷ நாள் கூட இல்லையே என ரசிகர்கள் பலரும் குழம்பினார்கள்..

இந்த நிலையில் இன்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் கமல். வரும் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் படம் வெளியாக இருக்கிறது. அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கமல்.

Most Popular

Recent Comments