நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்களாக மாறி இப்போது அவை விஜய் மக்கள் இயக்கமாக உருவெடுத்து சமூகத்திற்கு பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது புதிய முயற்சியாக, அதேசமயம் தாங்கள் ஏற்கனவே செய்துவந்த சுற்றுச்சூழல் குறித்த செயல்பாடுகளை இன்னும் விரிவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மண்வளத்தை தடுப்பது, விவசாயத்திற்கு இடையூறாக இருப்பது, குறிப்பாக வாயில்லா பிராணிகளான ஆடுமாடுகள் போன்றவற்றிற்கு உயிருக்கு கேடு விளைவிக்கும் பொருளான பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் தங்களது கவனத்தை திருப்பி உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்க பிரச்சாரம் செய்யப்பட்டு அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று தளபதி மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப்பட்டது அந்த வகையில் இந்த புதிய திட்டம் தற்போது செயல்படுத்த துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.