சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணா தற்போது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார். உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி தான் இந்த படத்தை இயக்கி வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி ஒரு நாட்டுப்புற குத்து பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
வயதான பெண்மணிகள் கூட்டத்தோடு சேர்ந்து ராய்லட்சுமி ஆடும் புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. ராஜூ சுந்தரம் மாஸ்டர் வடிவமைத்துள்ள இந்த பாடலுக்கு ஆறு நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி ஆடி கொடுத்துள்ளார் ராய்லட்சுமி.