நடிகர் கார்த்தி விவசாயம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார். உழவன் பவுண்டேஷன் என்கிற அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களை பெருமைப்படுத்தி ஊக்குவிப்பது போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வரும் கார்த்தி, காடுகள் குறித்தும் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் அவர் நடிக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அங்கு படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொடைக்கானல் பகுதியில் உள்ள காடுகளை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் கார்த்தி.
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “கோடை வெயிலுக்கு இதமளிக்கின்ற கொடைக்கானல் மிகப்பெரிய சுற்றுலா தளம். அங்கே உள்ள காடுகளில் வசிக்கும் ஏராளமான விலங்குகள், பறவைகள், காட்டு வளங்கள் ஆகியவற்றை காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதற்காக அனைவரும் ஒன்றிணைவோம்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.. கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயத்தின் சார்பாக இது போன்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் கார்த்தி.