புராண காலத்து கதையாக புதுமுகம் வினோத் மோகன் நடித்துள்ள படம் மாயன். பிரியங்கா மோகன், பிந்துமாதவி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நடிகர் ஆர்கே சுரேஷ், இயக்குனர் பிரபு சாலமன் உள்ளிட்டோர் இந்த படம் கிட்டத்தட்ட ஒரு பாகுபலி போன்று இருப்பதாக புகழாரம் சூட்டினார்கள்.
அதிலும் குறிப்பாக நடிகர் ஆர்கே சுரேஷ் கூறும்போது, இயக்குனர் ராஜேஷ் ஒரு குட்டி ராஜமவுலி என்று கூறியதோடு, இந்த மாயன் படத்தை இயக்குனர் ராஜமவுலி பார்த்துவிட்டு பாராட்டி இருப்பதாகவும் ஒரு தகவலை கூறினார். அந்தவகையில் ரிலீசுக்கு முன்பே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே செய்கிறது இந்த மாயன்.