சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றிகரமாக தங்களது பயணத்தை அமைத்து கொள்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒருவர் தான் நடிகை பிரியா பவனி சங்கர்.. கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியான ஓமனப்பெண்ணே என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ராசியான நடிகையாக கைநிறைய படங்களுடன் வலம் வருகிறார் பிரியா.
இந்தநிலையில் முதன்முறையாக தமிழையும் தாண்டி தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர்,, ஆம்.. யாவரும் நலம், சூர்யா நடித்த 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் குமார் தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து தூதா என்கிற ஒரு வெப் சீரிஸை .இயக்கி வருகிறார். நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்கும் இந்த தொடரில் தற்போது முக்கிய வேடத்தில் நடிக்க பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.