V4UMEDIA
HomeNewsKollywoodசீனியர் ஹீரோக்களுடன் நடிக்க தயங்காத ஸ்ருதிஹாசன்

சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க தயங்காத ஸ்ருதிஹாசன்

ஏழாம் அறிவு படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஸருதிஹாசன், தற்போது வரை பிசியான நடிகையாகவே வலம் வருகிறார். விஜய், அஜித், சூர்யா, பவன் கல்யாண், மகேஷ்பாபு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இடையில் படங்களில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் நடிப்பு பயணத்தை தொடர்ந்துள்ள ஸ்ருதிஹாசன் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக சீனியர் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் தெலுங்கில் முன்னணியில் இருக்கும் சீனியர் ஹீரோவான நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் நடிப்பு என வந்துவிட்டால் ஜூனியர் சீனியர் ஹீரோக்கள் என பாகுபாடு பார்க்காத ஸ்ருதிஹாசனின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Most Popular

Recent Comments