இயக்குனர் கரு.பழனியப்பன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கள்ளன். பத்திரிகையாளரும், அமீர், ராம் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான சந்திரா தங்கராஜ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ஆறு வருடமாக தயாரிப்பில் இருந்து வந்த இந்த படம் தற்போது ஒருவழியாக வரும் மார்ச் 18ல் ரிலீசாக இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நிகிதா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் வேலா ராமமூர்த்தி. நமோ நாராயணன், சௌந்தர்ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் கூட இந்த படத்தின் தலைப்பை பயன்படுத்த கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.