V4UMEDIA
HomeNewsKollywoodசர்தார் பட சண்டைக் காட்சிகளின் மூலம் வெளிப்பட்ட உண்மை

சர்தார் பட சண்டைக் காட்சிகளின் மூலம் வெளிப்பட்ட உண்மை

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தற்போது கார்த்தி நடித்து வரும் படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தியின் இரண்டு விதமான தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி அவர் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதையும் சொல்லிவிட்டன.

அதேசமயம் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் ஆன உறவு என்ன என்பது மட்டும் சஸ்பென்ஸ் ஆகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தில் தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் தான் கார்த்தி நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. படத்தில் இருவருக்குமே ஆக்சன் காட்சிகள் இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது அப்பாவாக நடிக்கும் கார்த்தியின் ஆக்சன் காட்சிகள் கொடைக்கானல் மற்றும் மைசூரில் உள்ள காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை திலீப் சுப்புராயன் மாஸ்டர் வடிவமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் கர்ணன் புகழ் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Most Popular

Recent Comments