பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து மகிழ்ந்துள்ளார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமார்.
இந்த பார்ட்டியில் படத்தின் நாயகன் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் கலந்து கொண்டனர். சூர்யா அறிமுகமான காலகட்டத்தில் அவர் நடித்த காதலே நிம்மதி, சந்திப்போமா, உயிரிலே கலந்தது என அவரது படங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தவர் தான் ராதிகா.
அந்த வகையில் கடந்த இருபத்தி நான்கு வருடங்களில் சூர்யாவின் படங்களில் அவ்வப்போது தனது பங்களிப்பை தந்து வரும் ராதிகா, இதற்கு முன்னதாக சிங்கம்-3 படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தார். அதேபோல எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.