தமிழில் கழுகு, பசங்க 2 உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நேர்மையான நடைமுறைகளால் இன்னும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நான்ஸ்டாப் நிகழ்ச்சியிலும் பிந்துமாதவி கலந்துகொண்டுள்ளார் அங்கே இவருக்கு பிந்து மாதவி ஆர்மியையே தற்போது ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் நாகார்ஜூனா இந்த வாரம் பிந்துமாதவியிடம் பேசும்போது, “உங்களுக்கு தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்கிற ஒரு சிக்கலான கேள்வியை கேட்டார்.. காரணம் பிந்து மாதவி தெலுங்கை பூர்வீகமாக கொண்டவர்.. ஆனால் அதற்கு பிந்து மாதவி கூறிய பதில் பக்குவமாகவும் அதேசமயம் நெகிழ வைப்பதாகவும் இருந்தது
பிந்துமாதவி கூறும்போது, “சார் இது நல்லது, இது நல்லது இல்லன்னு சொல்ல முடியாது, இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்… சென்னைக்கும் எனக்கும் மிக ஆழமான உறவு இருக்கு.. சென்னைக்கு என் இதயத்தில் தனி இடம் இருக்கு.. சென்னையில் தான் நான் வேலை பார்க்கிறேன்.. என் தாய் மொழி தெலுங்கு.. ரெண்டுமே எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி தான்” என கூற, சூப்பர் பதில் என்று நாகார்ஜுனா பாராட்டினார்.
பிந்து மாதவியின் இந்த பதிலை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆக்கி வருகின்றனர்.