V4UMEDIA
HomeNewsKollywoodவல்லான் ஆக மாறிய சுந்தர்.சி

வல்லான் ஆக மாறிய சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர்.சியை பொருத்தவரை, எப்போது தனது படத்தை டைரக்ட் செய்கிறார், எப்போது மற்றவர் படங்களில் இயக்கி நடிக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு, அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களின் அறிவிப்புகள், படப்பிடிப்பு முடிந்த விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் சுந்தர்.சி தற்போது மணி சேயோன் என்பவர் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு வல்லான் என டைட்டில் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த மணி சேயோன் இயக்குனர் அறிவழகனின் சீடர் என்பதும் சிபிராஜ் நடித்த கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கியவர். என்பதும் குறிப்பிடத்தக்கது..

ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோரும் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

Most Popular

Recent Comments