பரியேறும் பெருமாள் கர்ணன் என இரண்டு படங்களிலேயே முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்து விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். ரஞ்சித்தின் சீடரான இவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாரிசெல்வராஜின் பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் மாரிசெல்வராஜ். வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.