V4UMEDIA
HomeNewsKollywoodபிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை

பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை

சின்னத்திரை தொடரில் ஆரம்பித்து, நட்புன்னா என்னன்னு தெரியுமா படம் மூலம் கதாநாயகனாக மாறிய நடிகர் கவின், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தற்போது அவரை தேடி கதாநாயகன் வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்துள்ளன. அப்படி லிப்ட் என்கிற படத்தில் நடித்த கவின், அதைத்தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா தாஸ் நடிக்க இருக்கிறார். இவர் வேறு யாருமல்ல.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் பீஸ்ட் பட போஸ்டர் வெளியானது அல்லவா..? அதில் நாயகி பூஜா ஹெக்டேவை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்து பரபரப்பாக பேசப்பட்டவர்தான் இவர்..

மலையாளத்தில் மனோகரம் என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் பீஸ்ட் படம் மூலமாக தமிழில் நுழைந்து, இங்கேயும் அழுத்தமாக காலூன்ற இந்த படம் இவருக்கு பேருதவியாக இருக்கும். இந்த படத்தை கணேஷ் கே.பாபு என்பவர் இயக்குகிறார். இவர் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்..

Most Popular

Recent Comments