Home News Kollywood 102 முதியவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

102 முதியவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவர் படம் ரிலீஸ் ஆகும்போது கொண்டாட்டங்களில் ஈடுபடுவது, படம் வெளியான அந்த சில நாட்கள் மட்டும் தான். அதன்பிறகு அவர்கள் தங்களது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சமூக நல நற்பணிகளில் இறங்கி விடுகின்றனர். ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் 102 முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநில அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்த் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.