V4UMEDIA
HomeNewsKollywoodஜெனிலியா ரிட்டன்ஸ் ; முதன்முறையாக கன்னடத்திலும் கால் பதிக்கிறார்

ஜெனிலியா ரிட்டன்ஸ் ; முதன்முறையாக கன்னடத்திலும் கால் பதிக்கிறார்

சுட்டித்தனமான, குறும்புக்கார இளம்பெண் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமானவர் யார் என கேட்டால், அனைவரது முதல் சாய்ஸும் ஜெனிலியா என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு சந்தோஷ் சுப்பிரமணியம் படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் ஜெனிலியா.

2011ல் விஜய்யுடன் இணைந்து நடித்த வேலாயுதம் படம் தான் தமிழில் அவர் கடைசியாக நடித்த படம். அதன் பிறகு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேல் நடிக்காமல் இருந்த ஜெனிலியா, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சில படங்களில் நட்புக்காக மட்டும் தலை காட்டினார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் வெளியான இட்ஸ் மை லைஃப் என்கிற படத்தில் நடித்திருந்தார் ஜெனிலியா. இந்தப்படம் அவர் ஏற்கனவே பதினைந்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் நடித்த பொம்மரிலு படத்தின் ரீமேக்தான். அதைத்தொடர்ந்து தற்போது கன்னடத்தில் உருவாக இருக்கும் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ஜெனிலியா.

முன்னாள் கர்நாடக அமைச்சரும் தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி என்பவரது மகன் கிரீத்தி இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழாவிற்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி நேரில் வந்து கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இந்த விழாவில் நடிகை ஜெனிலியாவும் கலந்துகொண்டு பேசும்போது, “முக்கியமான கதாபாத்திரம் என்பதால் என்னால் மறுக்க முடியவில்லை. அதேசமயம் கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து நடிக்க வருவதால் ஏதோ புதிதாக அறிமுகம் ஆவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments