தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் என பலர் ஹீரோக்களாக அறிமுகமாகி வந்த வேளையில், வாரிசு நடிகைகள் என்பவர்கள் குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே இருந்தனர். அப்படி அறிமுகமான பலரும் ஒரு சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டனர்.
அந்தவகையில் நடிகர் சரத்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக தான் களமிறங்கினார் வரலட்சுமி சரத்குமார் ஆனால் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் கதையை தேர்ந்தெடுக்கும் விதத்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தற்போது பிஸியான கதாநாயகியாக வலம் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். குறிப்பாக தென்னிந்திய அளவில் தேடப்படும் நடிகையாகவும் மாறிவிட்டார்.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி தான் நடத்தி வரும் சேவ் சக்தி என்கிற பெண்கள் அமைப்பின் சார்பாக கேன்சரால் பாதித்த குழந்தைகள் மற்றும் நோயாளிகளுடன் பிறந்தநாளை செலவிட்டு அவர்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவியும் செய்து கொண்டாடியுள்ளார்.