துள்ளுவதோ இளமை படம் மூலம் ஒரே நேரத்தில் திரையுலகில் நுழைந்தார்கள் அண்ணன் தம்பியான செல்வராகவனும் தனுஷும். இன்று இருவருமே தங்களது துறையில் முன்னணி இடத்தில் இருக்கின்றனர். தனுஷ் அண்ணனை போலவே இயக்குனராக மாதிரி ஒரு படம் இயக்கி விட்டார்.. தற்போது தம்பியின் வழியில் ஒரு நடிகராக மாறி இயக்குனர் செல்வராகவனும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்கிற படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இன்று செல்வராகவனின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக அவருக்கு பிறந்த நாள் பரிசாக நானே வருவேன் பட போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனுசும் செல்வராகவனும் சேர்ந்தே இடம் பெற்றுள்ளனர்.
இந்த போஸ்டரில் செல்வராகவன் இதுவரை பார்த்திராத ஒரு புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஒருவேளை நானே வருவேன் படத்தில் கெஸ்ட் ரோலிலோ அல்லது முக்கியமான கதாபாத்திரத்திலோ அவர் நடிக்கிறாரா என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்