குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் தனது பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை மீனா. இப்படி நீண்டகாலம் கலை சேவையாற்றிய அவருக்கு உரிய கவுரவம் தேடி வருவது இயல்பு தானே.. அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகம் நடிகை மீனாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து உள்ளது.
இந்த கோல்டன் விசா மூலமாக ஐக்கிய அமீரக அரசுக்கு உட்பட்ட ஏழு நகரங்களில் பத்து வருட காலம் வசிப்பதற்கு, இதன்மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விசா, சமீபத்தில் நடிகர் பார்த்திபன், விஜய்சேதுபதி, திரிஷா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.