V4UMEDIA
HomeNewsKollywoodவரலட்சுமியின் பிறந்தநாள் பரிசை வெளியிட்ட சுதீப்

வரலட்சுமியின் பிறந்தநாள் பரிசை வெளியிட்ட சுதீப்

தமிழ் சினிமாவில் தற்போது வலம் வரும் கதாநாயகிகளில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சற்றே தனித்துவமானவர் என்று கூட சொல்லலாம். காரணம் அவர் கதாநாயகர்களுடன் டூயட் பாடி நடிப்பது என்பது அபூர்வம். வில்லியாக, சண்டக்கோழியாக நடிக்க வேண்டுமா என்றால் கூப்பிடு வரலட்சுமியை என்று சொல்லும் அளவிற்கு, படத்தின் கதையையும் தனது கதாபாத்திரத்தையும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார் வரலட்சுமி.

அந்தவகையில் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் இப்படி நடிக்கும் ஒரே நடிகை இவராகத்தான் இருப்பார். அந்தவகையில் தற்போது கன்னடத்தில் இவர் ஹனுமான் என்கிற படத்தில் நடித்துள்ளார். பிரஷாந்த் வர்மா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அஞ்சம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி./

இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை வெளியிட்டு வரலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் கூறியுள்ளார் நடிகர் கிச்சா சுதீப். போஸ்டரை பார்க்கும்போதே இவர் அஞ்சம்மா இல்லை.. அதிரடி மங்கம்மா என்பது போலத்தான் நினைக்க வைக்கிறார் வரலட்சுமி.

Most Popular

Recent Comments