தமிழில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றவர் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ். அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று ஹீரோவாக மாறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சரியான பட வாய்ப்புகள் அமையாமல் கால தாமதம் ஆகிக்கொண்டே வந்தது.
இந்த நிலையில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல முகேன் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. அந்த வகையில் கவின் இயக்கத்தில் வேலன் என்கிற படத்தில் நடித்துள்ள முகேன், அதைத்தொடர்ந்து மதில் மேல் காதல் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நித்யா மேனன், நானி நடித்த வெப்பம் என்கிற படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் என்பவர் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பேச்சிலர் புகழ் திவ்யபாரதி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சாக்ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து நெஞ்சோரமா என்கிற பாடல் வெளியாகி உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் பார்வையாளர்களால் இந்த பாடல் பார்க்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.