கிட்டத்தட்ட 20 வருடங்கள் வரை சினிமாவில் ஆக்சன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வந்த நடிகர் அர்ஜுன் தற்போது தனது செகண்ட் இன்னிங்சில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக மற்றும் கதையின் நாயகனாகவும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் புதிதாக உருவாகிவரும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ என்கிற ஆக்சன் க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்கிறார் அர்ஜுன். இந்த படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அர்ஜுன் எதிரிகளின் கொலைகளை நடுங்க வைக்க தயாராகி வருகிறார் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தினேஷ் லட்சுமண் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். கொடூரமான முறையில் நிகழும் ஒரு கொலையும் அதன் பின்னணியில் நடக்கும் விசாரணையும் என அழுத்தமான கிரைம் த்ரில்லராக இந்தப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் அப்படியே தன்னை பொருத்திக் கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸக் குழந்தைகளின் பின்னணியில் இருக்கும் ஒரு வலிமையான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.