மதயானைக்கூட்டம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நம்பிக்கை தரும் நாயகனாக மாறியவர் நடிகர் கதிர். பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரியில் ஜாதியின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை வெளிப்படுத்தும் விதமாக நடித்த கதிர், தற்போது முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்களின் அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இயல்வது கரவேல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அனைவரும் நன்கு அறிந்த யுவலட்சுமி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை எஸ்எல்எஸ் ஹென்றி இயக்குகிறார். நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் மற்றும் அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் ஆகியோரிடம் சினிமா பயின்றவர்
முக்கியமான வேடங்களில் கரு.பழனியப்பன், மாஸ்டர் மகேந்திரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பரியேறும் பெருமாள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
மாணவர்கள் அரசியலை பற்றி பேசும் படம் என்பதால் இதற்காக நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு இந்த கதையை உருவாக்கி இருக்கிறாராம் இயக்குனர் ஹென்றி. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டிவனம், புதுச்சேரி மற்றும் வட சென்னை பகுதிகளில் துவங்க இருக்கிறது.