V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய் ஆண்டனி படத்தில் விஜயகாந்த் ; உறுதி செய்த மழை பிடிக்காத மனிதன் படக்குழு

விஜய் ஆண்டனி படத்தில் விஜயகாந்த் ; உறுதி செய்த மழை பிடிக்காத மனிதன் படக்குழு

இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய்மில்டன் இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி, சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்த படம் இந்தியாவின் மிகச் சிறப்பு வாய்ந்த டையூ டாமன் பகுதியில் படமாக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தில் சரத்குமார் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு நிறைவடைந்தன. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது. அதற்கு சாத்தியமில்லை, அது வதந்தி என்றே பலரும் கூறி வந்தார்கள்.. காரணம் தற்போது இருக்கும் உடல் நிலையில் விஜயகாந்த்தால் எப்படி நடிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் நடிக்கும் காட்சிகளை சென்னையிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் கிட்டத்தட்ட முப்பது வருட இடைவெளிக்கு பிறகு சரத்குமாரும் விஜயகாந்தும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும் என்று கூட சொல்லலாம்.

இந்த படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்க, முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், பிரணிதி, இயக்குனர் ரமணா, முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Most Popular

Recent Comments