கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடன இயக்குனராக வலம் வருபவர் பிருந்தா மாஸ்டர். தென்னிந்திய அளவில் பிசியான நடன மாஸ்டராக இருக்கும் இவர் தற்போது இயக்குனராக மாறி ஹே சினாமிகா என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க காஜல் அகர்வால் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 3ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து சிறகை சிறகை என்கிற திருமண பாடல் இன்று வெளியானது.
இந்த பாடலை பார்த்துவிட்டு நடிகை திரிஷா, “அருமையான உற்சாக துள்ளலுடன் கூறிய திருமண பாடல்” என்று குறிப்பிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திரிஷாவின் இந்த வாழ்த்திற்கு படத்தின் நாயகன் துல்கர் சல்மான் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.