V4UMEDIA
HomeNewsKollywoodஒரிஜினல் 20 ரீமிக்ஸ் 100 ;  சாதனை சந்தானத்துக்கா ? கமலுக்கா ?

ஒரிஜினல் 20 ரீமிக்ஸ் 100 ;  சாதனை சந்தானத்துக்கா ? கமலுக்கா ?

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் வெளியாகி புகழ்பெற்ற பாடல்களை அவ்வப்போது இளம் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சந்தானம் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான டிக்கிலோனா படத்தில் தொண்ணூறுகளில் கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ என்கிற பாடல் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப்பட்டது.

ஒரிஜினலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.. ரீமிக்ஸ் பாடலுக்கு அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இந்த ரீமிக்ஸ் பாடல் தற்போது யூட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளது.

அதேசமயம் தொண்ணூறுகளில் வெளியான கமலின் பாடல் இதுவரை யூட்யூப் தளத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த பாடலில் முதலில் நடித்த கமலுக்கு இந்த சாதனை சொந்தமா ? கமல் பாடல் என்கிற அடையாளத்துடன் ரீமேக் செய்யப்பட்டு சந்தானம் பாடலாக மாறியதால் இந்த சாதனை சந்தானத்திற்கு சொந்தமா என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போல..

Most Popular

Recent Comments