கர்ணன் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தில் நடிகர் பஹத் பாசில் வில்லனாகவோ அல்லது முக்கிய வேடத்திலோ நடிக்கிறார் என ஒரு தகவல் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த தகவல் உண்மைதான் என ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வின் மூலம் உறுதியாகி உள்ளது..
ஆம்.. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பிரபலங்கள் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் பஹத் பாசில் ஒன்றாக இணைந்து முதல்வரை நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளனர்..
இந்த சந்திப்பின்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினும் அவர்களுடன் இருந்தார்.