சண்டக்கோழி, பையா என தொடர் ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் லிங்குசாமி, அஞ்சான், சண்டக்கோழி 2 படங்களுக்கு பிறகு தமிழில் படம் இயக்கவில்லை. அதேசமயம் தற்போது தெலுங்கில் இளம் முன்னணி நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் வாரியர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் கதாநாயகியாக, குறுகிய காலத்தில் பிரபலமான நடிகை கீரீத்தி ஷெட்டி நடிக்கிறார். நடிகர் ஆதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வில்லன் ஆதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் குரு என்கிற கொடூரமான வில்லனாக நடிகர் ஆதி.
பொதுவாக இயக்குனர் லிங்குசாமியின் படங்களில் கதாநாயகனுக்கு இணையாக வில்லனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். ரன் அதுல் குல்கர்னி, சண்டக்கோழி லால் என இன்றளவும் அவரது பவர்ஃபுல் வில்லன்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறார்கள்.. அந்த வகையில் அதிகம் நடிகர் ஆதியும் ரசிகர்கள் மனதில் வில்லனாக தடம் பதிப்பார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்