லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. இதை தொடர்ந்து தற்போது அழகிய கண்ணே என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் கதாநாயகனாக லியோ சிவகுமார் என்பவர் நடிக்க, கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது.
சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.விஜயகுமார் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, ராஜ்கபூர், விஜய் டிவி ஆண்ட்ரூஸ், காதல் சுகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்க இருக்கின்றன.