V4UMEDIA
HomeNewsKollywoodவிஞ்ஞானியாக மாறும் ஹன்சிகா ; ஈசிஆரில் அமைக்கப்படும் பிரமாண்ட லேப்

விஞ்ஞானியாக மாறும் ஹன்சிகா ; ஈசிஆரில் அமைக்கப்படும் பிரமாண்ட லேப்

குறிப்பிட்ட காலகட்டத்திற்குள், சொன்ன தேதிக்குள், சொன்ன பட்ஜெட்டில் படத்தை இயக்கி தயாரிப்பாளர்களின் மினிமம் கியாரண்டி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஆர்.கண்ணன். இந்த கொரோனா தாக்கம் மட்டும் ஏற்படாமல் போயிருந்தால் வருடத்திற்கு இரண்டு படங்களாவது இயக்கும் திறமை கொண்டவர் தான் ஆர்.கண்ணன். தற்போது கூட ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் மிர்ச்சி சிவா நடிப்பில் காசேதான் கடவுளடா என 2 படங்களை முடித்து ரிலீசுக்கு தயார் நிலையில் வைத்துள்ளார்.

இந்த இந்நிலையில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் கண்ணன். சயின்ஸ் பிக்சன் ஹாரர் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஹன்சிகா இளம் விஞ்ஞானி ஆக நடிக்கிறார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய பொருட்செலவில் லேப் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் இந்தப் படத்தின் கதை மீது கொண்ட நம்பிக்கையால் இந்த படத்தை தயாரிக்கும் இயக்குனர் கண்ணனுடன் தானும் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கிறார் ஹன்சிகா.

இன்று பூஜையுடன் படத்தை துவங்கியுள்ள ஆர்.கண்ணன் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என ரிலீஸ் தேதியையும் முன்கூட்டியே அறிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments