நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்திலிருந்து சமீபத்தில் அரபிக்குத்து என்கிற பாடல் வெளியானது. அனிருத் இசையமைத்து பாடி இருந்த இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். விஜய்யின் முந்தைய பாடல்களில் இருந்து ஆச்சரியப்படும் விதமாக இந்தப்பாடல் குறைந்த நேரத்திலேயே அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்படும் பாடலாக மிகப்பெரிய வரவேற்பை பெற ஆரம்பித்தது. இந்த நிலையில் தற்போது 100 மில்லியன்கள் பார்வையாளர்களால் இந்தப்பாடல் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
இந்த பாடலில் அரபிக்குத்து என்பதற்கு ஏற்ப அரபி வார்த்தைகளால் புதுமையான முறையில் எழுதப்பட்டிருந்ததும் அதற்கு அனிருத்தின் இசை மிக பொருத்தமாக அமைந்திருந்ததும் அந்த பாடலை அனிருத்தும் ஜோநிதா காந்தியும் மிக நேர்த்தியாக உற்சாகத்துடன் பாடியிருந்ததும் அந்த பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சில நொடிகளே வந்து சென்றாலும் அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தியிருந்தது என பல காரணங்களால் இந்தப்பாடல் ரசிகர்களால் திரும்பத்திரும்ப பார்க்கப்படுவதாலேயே இந்த சாதனையை இவ்வளவு சீக்கிரத்தில் தொட முடிந்தது என்பதே உண்மை. இனி வரும் நாட்களில் இந்த படம் வெளியாவதற்குள்ளாகவே இந்த பாடல் இன்னும் மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்