V4UMEDIA
HomeNewsKollywoodஆண்டவன் கட்டளையை ரீமேக் செய்யும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா

ஆண்டவன் கட்டளையை ரீமேக் செய்யும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி படங்களை தயாரித்து வருகின்றனர் கூலாங்கல் உள்ளிட்ட விருதுக்கு தகுதியான படங்களையும் ஒருபக்கம் தயாரித்துக் கொண்டே நெற்றிக்கண், ராக்கி காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உள்ளிட்ட கமர்சியல் படங்களையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் வெளியான வெளியான ஆண்டவன் கட்டளை என்கிற படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்கின்றனர்.

இந்த படத்தில் கதாநாயகனாக குஜராத்தி நடிகர் பல்ஹர் தாக்கர் நடிக்கிறார். கதாநாயகியாக தமிழில் சிகரம் தொடு படத்தில் நடித்த மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். இந்த படத்தை தேசிய விருதுபெற்ற குஜராத்தி இயக்குனர் மனிஷ் ஷைனி என்பவர் இயக்குகிறார்.

Most Popular

Recent Comments