விஜய் நடித்த செல்வா, நிலாவே வா, பகவதி உள்ளிட்ட பல கமர்சியல் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். தற்போது இவர் இயக்கிவரும் படத்திற்கு ரஜினி என்று டைட்டில் வைத்துள்ளார்.. பலரும் இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய கதையாக உருவாகி வருகிறதா என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் தற்போது இது பற்றி விளக்கம் அளித்துள்ள இயக்குனர் வெங்கடேஷ், இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய படமல்ல.. இந்த படத்தின் கதாநாயகன் விஜய் சத்யா சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை என கூறியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நீண்ட நாளைக்கு பிறகு ஷெரின் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் வனிதா விஜயகுமா,ர் இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.